1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edappadi Palanidamy will discuss for lockdown extension

தமிழகத்தில் நீட்டிக்கப்படுமா ஊரடங்கு? – முதல்வர் விரைவில் ஆலோசனை

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பொதுமுடக்கத்தை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நாளுக்குநாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஜூலை 31 வரை அறிவித்த பொதுமுடக்கம் முடிவடைய உள்ளது. எனினும் புதிய பாதிப்புகள் ஏற்படாத நிலை தமிழத்தில் உருவாகவில்லை. இந்நிலையில் இந்த மாத இறுதியோடு பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜூலை 29ம் தேதி நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முழு முடக்கம் நீட்டிக்கப்படுமா அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு மற்ற நாட்களில் தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
40 நாட்களாக இருட்டில் கிடந்த கிராமம்; எல்லாம் ஒரு பறவைக்காக!