திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (06:57 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்டது உண்மையா? டுவிட்டரில் விஷால் விளக்கம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற செய்தியை அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறோம். நேற்று கூட தமிழகத்தில் சுமார் 7000 பேர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கொரோனாவால் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் திரையுலகினர் பலர் பாதிக்கப்பட்டு வரும் செய்திகள் குறித்து அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் நேற்று மாலை திடீரென விஷாலுக்கும் அவருடைய தந்தை ஜிகே ரெட்டி அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் 20 நாட்களாக அவர்கள் சிகிச்சை எடுத்து அதன் பின்னர் குணமானதாகவும் செய்திகள் வெளிவந்தது. இந்த செய்திகள் குறித்து நடிகர் விஷால் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் 
 
ஆம் இந்த செய்திகள் உண்மைதான் எனது தந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு உதவி செய்ததால் எனக்கும் அதிகபட்சமாக கொரோனாவின் அறிகுறி இருந்தது. அதிக வெப்பநிலை, சளி மற்றும் இருமல் ஆகியவை எனக்கும் எனது மேனேஜருக்கும் இருந்தது. இதனை அடுத்து நாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டோம். இந்த சிகிச்சையின் காரணமாக நாங்கள் தற்போது முழு அளவில் குணம் அடைந்துள்ளோம். தற்போது நாங்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்கிறோம். இதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஷால் எந்தவிதமான ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொண்டார் என்பதை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு கூறி உதவி செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன