1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2026 (19:21 IST)

செங்கோட்டையன் ஒழுங்கா பேசு!. ரகசியத்தை டிவில போட்ருவேன்!.. மிரட்டிய பழனிச்சாமி..

eps sengottaiyan
அதிமுகவில் பல வருடங்கள் எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் இருந்தவர் செங்கோட்டையன்.. அதிமுகவிலிருந்து நிக்கப்பட்டவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்ததால் அவரை அதிமுகவின் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் பழனிச்சாமி. ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், சசிக்கலா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்ததால்தான் அவரை பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கியதாக சொல்லப்பட்டது. அதன்பின் விஜயின் தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்..

தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் பழனிச்சாமி பற்றி கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார் செங்கோட்டையன். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரச்சாரத்தில் பேசிய செங்கோட்டையன் ‘துரோகத்தின் மொத்த உருவம் எடப்பாடி பழனிச்சாமி.. அவர் மனிதநேயமற்றவர். அவரை பொதுச்செயலாளர் ஆக்கியது என் தவறு.. சசிகலாவை ஒதுக்கி துரோகி பட்டம் கொடுத்தார்.

அவர் சிறையில் இருந்து விடுதலை ஆனபோது அவருக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவு போட்டார்.. சசிகலா 15 நாளில் பரோலில் வந்த போது கூட அதிமுகவினர் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக அவ்வளவு உதவிகள் செய்தும் 2024ம் வருடம் தனித்து நின்றார்.. தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக சொல்லி ஏமாற்றினார்.. இப்படி பழனிச்சாமி செய்த துரோகிகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்’ என்று பேசியிருந்தார்.

இன்று பிரச்சாரத்தில் பேசிய பழனிச்சாமி செங்கோட்டையனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசினார். இனிமேல் செங்கோட்டையனுக்கு மரியாதை கிடையாது.. நீ ஒழுங்கா பேசுனா நானும் உனக்கு மரியாதை கொடுத்து பேசுவேன்.. உன்ன பத்தி பல ரகசியம் என்னிடம் இருக்கு.. நீ பண்ண எல்லாம் எனக்கு தெரியும்.. டிவில போட்டு விட்டுருவேன்.. நீ ஈரோடு தொகுதில தலை காட்ட முடியாது.. அரசியல்ரீதியா பேசினா நானும் பேசுவேன்’ என்று அதிரடியாக பேசியிருக்கிறார் பழனிச்சாமி.