செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஏ. சினோஜ்கியான்
Last Updated : சனி, 31 ஆகஸ்ட் 2019 (16:55 IST)

நடிகர் விஜய்யை வரவேற்கும் சீமான் .. எதிர்க்கும் அதிமுக ! ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு நிறைவேறுமா ?

நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அவ்வப்போது அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளியிடுவார்.  ரஜினி சினிமாவில் இருந்து விலகினால் அவர் இடத்திற்கு நடிகர் விஜய்தான் வருவார் என்று  சீமான் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் சர்வதேச காணாமல் போனோர்  தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது :

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தனது சம்மதமில்லை.  ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். நடிகர் விஜய் போன்று நடிகர் சிம்பு ஆடல், பாடல், நடிப்பு, இசை எனப் பல திறமைகள் கொண்டவர்  என சிம்புவை பாராட்டிப் பேசினார்.  

மேலும், நடிகர் விஜய்க்கு அடுத்தபடியாக உச்ச நட்சத்திரமாக அனைத்து தகுதிகளும் சிம்புடம் உள்ளது. ஆனால் சிம்புவிடம் உள்ள ஒரேகுறை அவர் நேரம் தவறுவதுதான். இதை சரிசெய்யும்படி அவரிடம் கூறியுள்ளேன் எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே நடிகர் விஜய்யை விட அடுத்த சூப்பர் ஸ்டாராகும் தகுதி சிம்புவுக்குத்தான், அண்ணாவுக்கு எம்.ஜி.ஆர் மாதிரி அண்ணனுக்கு நீதான் ( சிம்பு) என விஜய்க்கு  எதிராக சீமான் தெரிவித்த கருத்துகள், விஜய்யின் ரசிகர்களிடையேயும் தமிழக மக்களிடையேயும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விஜய்யை விட சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது போலவும், விஜய்யை விமர்சித்து அவர் பேசியது, அவரது ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வெறித்தமான எதிர்ப்புகளை தெரிவித்து வசைபாடினர். இதுபெரும் பேசுபொருளானது. இந்நிலையில் சீமான் நடிகர் விஜய்யை புகழ்ந்திருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது. நேற்று சீமான் செய்தியாளர்களை சந்தித்தபோது விஜய்யை குறித்து மட்டும் பேசவில்லை. ஈழத் தமிழர்கள் குறித்தும் பேசியிருந்தார். ஆனால் தமிழக மீடியாக்கள் நடிகர்களை மட்டும் வெளிச்சம் பாய்ச்சுவதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஒருவேளை நடிகர்களின் மனதில் அரசியல் ஆசை இருந்தாலும்,இல்லாவிட்டலும் கூட நம் ஊடகங்களே அவர்களை கிளப்பிவிடுவார்கள் போலும் என பொதுமக்களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். அதேசமயம் ரசிகர்களின் அவ்வப்போதைய கோசமும் நடிகரின் காதுகளுக்கும்,பார்வைக்கும்  எட்டாமல் போஸ்டர்களாகவும், சாலைகளின் தோரணங்களாகவும் உலா வருமா என்பது ஆயிரம் ’கேள்விப்பட்டுகளாகக் காதைக் குடைகிறது.

அரசியர் வேர் பிடித்து நிற்கின்ற இரு திராவிட கட்சிகளுமே ( திமுக - அதிமுக ) தம் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது, நம்மைத்தவிர மாற்றுகட்சி உதிக்கக் கூடாது என்று.ஆனால் அரசியல் தலையெடுத்த கமல்ஹாசன், தற்போது பாஜக தலைமைக்கு ஆதரவாக வார்த்தைச் சாமரம்வீசி இனிவரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் தலையெடுக்கவுள்ள  ரஜினி காந்த், தேமுதிக எனும் கட்சியைப் புயலாகத் தோற்றுவித்து  இன்று விஜயகாந்தின் உடல்நலக்குறைவால்  அரசியல் கால் தடுமாறுக்கின்ற அக்கட்சியினர், வடக்கே ஆர்த்தெழுந்தாலும் தெற்கில் இன்னும் சூடுபிடிக்காமல் கூட்டணிகொள்கையில் ஒட்டிக்கொண்டுள்ள எல்லோரது பேச்சும் அடுத்து விஜய் மீது திரும்பியிருக்கிறது.

விஜய்யின் ரசிகர் மன்றத்தை, மக்கள் இயக்கமாக மாற்றியதில் விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் முக்கியப்பங்கு இல்லாமலிருக்காது. அமைதியாக இன்று நடிப்பு பயணத்தை தொடர்கின்ற விஜய்க்கு அரசியல் ஆசை முளைத்துள்ளதில் வியப்பொன்றும் இல்லை. ’மக்களுக்கு நல்லது  செய்வது அவரது ’’அடிமனதில் ஆவலாக’’ உள்ளதாக’ ஒரு முக்கிய அரசியல் பிரமுகரிடம் அவரே கூட சொல்லியிருக்கிறார்’. அப்படியிருக்க அவருக்கான அரசியல் அறிவிப்புகள் வரும் முன்னே இத்தனை ஆதரவுகள், எதிர்ப்புகள் வந்து அவர் மீது குவிவது அவர் இன்று உயர்ந்துள்ள உச்ச நிலையையும் , ரசிகர் வட்ட விரிவையும், மக்கள் செல்வாக்கையும் இன்று அவருக்கு சமூகவலைதளத்தில் அவர் மீதான இளநெட்டிசன்களின் ஈர்ப்பையும் காணமுடியும்!

நடிகர் விஜய் அரசியலை மையமாகக்கொண்டு சினிமா ஆயுதத்தை சுழற்றிவருவது..அவரது வியாபாரத்திற்கு ஒருபுறம் இடைஞ்சலாகவும் , அது தயாரிப்பாளரின் முதுகில் பிரமிடுவை ஏற்றிச்சுமப்பது போலவும் ஒரு இடக்கரடக்கலான நிலையை  உருவாக்கிடவும் வாய்ப்புகள் அதிகமுள்ளது என்பதை அவர் கவனிக்காமல் இருக்கமாட்டார்.

இந்த நிலையில் விஜய்யை அவரது  அம்மா ஷோபாவின் சூப்பர்  ஸ்டாராக வரவேண்டுமென வாழ்த்தி உள்ளதும், விஜய்யை அரசியல் தீவுக்குள் இழுத்துவர ஆர்வம்பொங்குகின்ற அவரது ரசிகர்கள் மற்றும் அவரை திரையில் அறிமுகம் செய்து விஜய்யின் அரசியல் வருகையை பேட்டியின் போது உறுதிசெய்கின்ற அவரது அப்பா எஸ். ஏ. சந்திரசேகரும் விஜய் எப்போது  அரசியல் ஆழங்கால் ஊன்றுவார் என்பதை எதிர்பார்த்துள்ளனர்.

இவர்களைவிட முக்கியமாக அவரை வம்புக்கு இழுத்துப் பேசி மீடியாவுக்கு ’தீனி ’கொடுக்கின்ற ஆளும், எதிர்கட்சிகளும் தான் என்பது நிதர்சனமாகிறது. ஏற்கனவே ஒரு நடிகர் எதிர்கட்சியின் ’இளைஞர் ஸ்டாராக உதயமாகிவரும் நிலையில்’ தம் நடிகர் என்ற மாபெரும் பிம்பத்தை வைத்து, அதிமுகவை தொடங்கி இன்று வரை தமிழ் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களின் மனப்பீடத்தில் தெய்வமெனத் தம் பெயரை  உலவ விட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் தொடங்கிய கட்சியின் அத்தைகைய சினிமா நட்சத்திரங்கள் இல்லாததும் இனிவரும் காலத்தில் அக்கட்சியின் பின்னடைவுக்குக் காரணமாக அமையலாம் ( விஜய் அதிமுகவை  எதிர்க்காதவரை ).. இன்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ள கருத்தும்! இதற்குப் பொருந்தும் (நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார் 

அதனால் இருபெரும் திராவிட கட்சிகள் விஜய்யின் அரசியல் வருகையை கமலைப் எதிர்கொண்டதைப் போலவே இவரையும் எதிர்காலத்தில் எதிர்க்கவே செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதேசமயம் மற்ற கட்சிகள் விஜய்யை மனம்திறந்து பாராட்டிப்பேசுவது தம் கட்சியில் அவரை ஐக்கியமாக்குவதற்காகக்கூட இருக்க வாய்ப்புகள் விசாலமாக உண்டு என்பதே உண்மை.