அதிமுக அமைச்சரவையா? சுற்றுலா அமைச்சரவையா? முக ஸ்டாலின் கேள்வி

Last Modified ஞாயிறு, 1 செப்டம்பர் 2019 (13:26 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் உள்ளார். லண்டனில் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, ஒருசில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட நிலையில் இன்று அவர் அமெரிக்கா செல்கிறார்.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் 7 நாள் அரசு முறை பின்லாந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் விரைவில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தனது துறை சம்பந்தமாக ஆலோசனை நடத்த ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மேலும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் உயரதிகாரிகள் குழு தற்போது இந்தோனேசியா புறப்பட்டு சென்றனர். இந்தோனேஷியாவை அடுத்து தாய்லாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு முதல்வரும் அதிமுக அமைச்சர்களும் அடுத்தடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்வது குறித்து இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக ஸ்டாலின் கூறியபோது, 'அதிமுக அரசில் தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியிருப்பதாகவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தமிடப்பட்ட 5.5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர்கள் வெளிநாடுகளில் சுற்றி வருவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.


இதில் மேலும் படிக்கவும் :