நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால்... அதிமுகவை அசைக்க முடியாது - ஜெயக்குமார்

vijay jeykumar
Last Updated: சனி, 31 ஆகஸ்ட் 2019 (18:12 IST)
நாம் தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அவ்வப்போது அதிரடியாக அரசியல் கருத்துகளை வெளியிடுவார்.  ரஜினி சினிமாவில் இருந்து விலகினால் அவர் இடத்திற்கு நடிகர் விஜய்தான் வருவார் என்று  சீமான் தெரிவித்தார். இதுகுறித்து இன்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை நிருபர்கள் சங்கத்தில் சர்வதேச காணாமல் போனோர்  தினத்தையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
 
அவர் கூறியதாவது :
 
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி தனது சம்மதமில்லை.  ஆனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். நடிகர் விஜய் போன்று நடிகர் சிம்பு ஆடல், பாடல், நடிப்பு, இசை எனப் பல திறமைகள் கொண்டவர்  என சிம்புவை பாராட்டிப் பேசினார்.  இதுகுறித்து  இன்று அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர். 
 
அப்போது அவர் கூறியது : நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார். 
 


இதில் மேலும் படிக்கவும் :