1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Edapadi and ops pay tribute to Anna statue

பேரறிஞருக்கு முதல்வர் பழனிசாமி மரியாதை..

அண்ணா
பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசானி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செழுத்தினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ராமசாமியின் வழித்தோன்றலாக கருதப்படுபவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தின் திராவிட அரசியலின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.

இவரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அண்ணா சாலையில் உள்ள பேரறிஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
”திராவிட இயக்கத்தின் நிரந்தர போர்வாள் வைகோ தான்”..ஸ்டாலின் புகழாரம்