1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin pay tribute to Anna statue

பேரறிஞர் சிலைக்கு மாலை அணிவித்தார் ஸ்டாலின்..

ஸ்டாலின்
பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை பேரறிஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 111 ஆவது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக நீதி காவலர் என போற்றப்படுகிற பெரியார் ஈ.வே.ராமசாமியின் வழித்தோன்றலாக கருதப்படுபவர் பேரறிஞர் அண்ணா. தமிழகத்தின் திராவிட அரசியலின் மிக முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்தவர். பேரறிஞர் அண்ணா பல திரைப்படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார்.

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின், இன்று காலை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அடுத்த கட்டுரையில்
”என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்”.. தளபதி வலியுறுத்தல்