திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 25 ஜூலை 2022 (20:25 IST)

அதிமுக அலுவலகத்தில் மோதல்: அனைத்து முன் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி!

ADMK
சமீபத்தில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே நடந்த மோதலில் பலர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மோதலில் ஈடுபட்ட அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பினர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். 
 
இந்த நிலையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது 
 
குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் கோரிய அனைத்து மனுக்களும் தள்ளுபடி என நீதிமன்றம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இன்னும் சில கைது நடவடிக்கைகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.