ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2023 (10:19 IST)

மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதி: அமைச்சர் அமித்ஷா

Amitshah
மணிப்பூர் வீடியோ நாடாளுமன்ற கூட்டத்திற்கு முந்தைய நாள் வெளியானதில் சதி இருக்கலாம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் ஜூலை 19ஆம் தேதி மணிப்பூர் இளம் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ வெளியானது. 
 
இதனை அடுத்து எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் கடந்த ஐந்து நாட்களாக அமளி செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முதல் நாள் இந்த வீடியோ வெளியாக வேண்டிய அவசியம் என்ன என்றும் பிரதமர் மோடி அரசின் மாண்பை குறைக்க சதி செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். 
 
மணிப்பூர் அமைதியை சிதைக்கும் வகையில் இந்த வீடியோக்கள் இருப்பதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இந்த நிலையில் மணிப்பூர் பெண்கள் வீடியோ வீடியோ குறித்த விரிவான தகவல்களை பெரும் வகையில் மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran