1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:31 IST)

இ-பட்ஜெட் தாக்கலுக்கு ரெடியாகும் சட்டப்பேரவை

சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடக்கிவிடப்பட்டது. 

 
தமிழக பட்ஜெட் ஆகஸ்ட் 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட உள்ளதாகவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக விவசாய பட்ஜெட் தனியாக அன்றைய தினமே தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படவும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முடக்கிவிடப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமரக்கூடிய இருக்கைக்கு எதிர்புறம் உள்ள மேஜையில் கணினிகள் தற்போது பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் டேப் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.