1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Duraimurugan asks Edappadi Palanisamy to take steps for Cauvery

அரசியல் வேண்டாம்: துரைமுருகனின் திடீர் அறிக்கை!

எடப்பாடி பழனிசாமி
திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் அதிமுக அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு...
 
தமிழக முதலமைச்சர், திமுகவை குறைகூறுவதில் காட்டும் அக்கறையை, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி நீரை திறக்க வைப்பதில் அக்கறை செலுத்தவில்லை.
 
அதிமுக அரசு உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வெளிவந்ததில் இருந்து 113 நாட்களில் ஆக்கப்பூர்வமான, அழுத்தம் தரக்கூடிய செயல்களில் ஈடுபட்டிருந்தால், தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கும். 
 
ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என கூறுவது வேதனை அளிக்கிறது. தோல்வியை மறைக்க திமுக மீது குறைகூறுவது அதைவிட வேதனை தருகிறது. 
 
விவசாயிகள் நலனில், அரசியல் செய்வதை நிறுத்தி விட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் உடனடியாக தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
அடுத்த கட்டுரையில்
டெல்லியில் புழுதிப்புயல்; மக்களுக்கு எச்சரிக்கை