குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆன்லைனை நாடும் ஆப்கான் மக்கள்
குண்டுவெடிப்பில் இருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை வாங்கி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் கடந்த ஒரு வருடத்தில் தற்கொலை படை தாக்குதல் மற்றும் பயங்கரவாதிகள் தாக்குதலால் அதிகளவில் மக்கள் உயிரிழந்தனர். தெருக்களில் பாலியல் தொல்லைகளும் அதிகளவில் நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவை அனைத்திலிருந்து தப்பிக்க ஆப்கானிஸ்தான் மக்கள் ஆன்லைன்யை நாடி வருகின்றனர். பாதுகாப்பற்ற சூழலில் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனர். இதனால் அனைத்துவிதமான பொருட்களையும் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பெற்று வருகின்றனர்.
ஆப்கானில் குறைவாக இருந்த ஆன்லைன் வர்த்தகம் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.