ஜல்லிகட்டு நாயகன் ஓபிஎஸ், காவிரி கொண்டான் ஈபிஸ்: என்னய்யா இதெல்லாம்?
தமிழக சட்டசபை கூட்டம் நடிபெற்று வருகிறது. இண்டஹ் கூட்டத்தில் பல்வேரு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கபப்ட்டு வருகிறது. அதே வேளையில் அதிமுகவினர், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் அடைமொழிகளை வைத்து மகிழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில், சட்டமன்ற கூட்டத்தொடரில் எம்எல்ஏக்கள் பேசிய போது துணை முதல்வர் ஓபிஎஸ்யை 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்று புகழ்ந்து பேசினர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு தனிச்சட்டம் இயற்ற காரணமாக இருந்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இனி காவிரி கொண்டான் முதல்வர் பழனிச்சாமி என அழைக்கப்படுவார் என எம்எல்ஏ இன்பதுரை புகழாரம் சூட்டியுள்ளார்.
அதாவது, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி முக்கியமான காரணம் என எம்எல்ஏ இன்பதுரை முதல்வரை புகழ்ந்து பேசினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல், முதல்வர் ஜெயலலிதா காவிரித்தாய் என அழைக்கப்பட்டார் எனவே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி கொண்டான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என அழைக்கப்படுவார் என கூறினார். இதை கேட்ட அதிமுகவினர் ஆரவாரம் செய்தனர்.