திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 6 ஜூன் 2018 (21:50 IST)

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசேன் நியமனம்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 
காவிரி நதி நீரை பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் செயல் திட்டம் ஒன்றை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் தமிழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து மத்திய அரசு கடந்த மாதம் புதிய வரைவு செயல் திட்டத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. 
 
மத்திய அரசின் வரைவு திட்டம்படி காவிரி ஒழுங்காற்று ஆணையத்தின் அலுவலகம் பெங்களூரில் செயல்படும். அணைகளில் நீர் இருப்பை கண்காணிப்பது, நீரை சேமிப்பது, நீரைத் திறந்து விடுவது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட்டது. தற்போது காவிரி ஆணைய தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
 
ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார். மசூத் ஹுசேன் தற்போது மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.