திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (14:20 IST)

மீண்டும் தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிட வேண்டும்: திமுகவினர் கோரிக்கை..!

கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் தூத்துக்குடியில் கனிமொழியை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இதனால் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதி கிடைப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்ட நிலையில் இந்த முறை பாஜக சார்பில் மேலும் ஒரு வலிமையான போட்டியாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இருப்பினும் கனிமொழிக்கு தூத்துக்குடி தொகுதியில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அந்த பகுதி திமுக பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Siva