வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (13:48 IST)

எம்.பி சீட் கொடுக்க தயாராக இருந்தும் பேச்சுவார்த்தைக்கு வராத கட்சிகள்! அப்செட்டில் ஈபிஎஸ்..!

ADMK
ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அண்ணா அறிவாலயத்திற்கு நேரில் சென்று தாங்கள் போட்டியிடும் தொகுதி  பட்டியலை கொடுத்து வரும் நிலையில் அதிமுக பக்கம் பேச்சுவார்த்தை நடத்த ஒரு கட்சியும் வராமல் இருப்பது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக தொகுதி பங்கீடு குழு தயாராக இருந்த போதிலும் பெரிய அளவில் எந்த கட்சியும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வரவில்லை.  

ஜெகன்மூர்த்தி உட்பட ஒரு சில தலைவர்கள் நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி உடன் பேசுவதாகவும்  கட்சிகளின் பிரதிநிதிகள் என்று யாரும் தொகுதி பங்கிட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை என்று கூறப்படுகிறது  

பாஜகவுடன் கூட்டணியை முறித்து கொண்டால் சின்ன சின்ன கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்த்த நிலையில் ஒரு கட்சி கூட வராதது பெரும் அதிருப்தியை  ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran