வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜனவரி 2024 (15:16 IST)

25 இடங்களில் போட்டியிட திமுக திட்டம்..! அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்..!! உடைகிறதா கூட்டணி?..

dmk alliancee
வருகிற மக்களை தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அதன் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

நாடாளுமன்ற மக்களவைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் கூட்டணி பேச்சு வார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
 
alagiri thiruma
குறிப்பாக தமிழகத்தில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகள்  கேட்பதாக சொல்லப்படும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஐந்து தொகுதிகள் வரை கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதேபோல் இடதுசாரி கட்சிகளும், மதிமுகவும் மூன்று அல்லது நான்கு தொகுதிகள் வரை கேட்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் கூட்டணி கட்சிகளுடன் திமுக நடத்தி வரும் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கும் என தெரிகிறது.
 
stalin
அதேசமயம் வருகிற மக்களவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளதாகவும், கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்காவிட்டால் திமுக கூட்டணி உடையும் நிலை உருவாகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
ஒருவேளை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது போன்ற நிலைக்கு கூட்டணி கட்சிகளை திமுக தள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..