புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:11 IST)

சொத்து வரி செலுத்தக்கோரி தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ்: தொல்லியல் அதிகாரிகள் விளக்கம்

tajmahal
குடிநீர் மற்றும் சொத்து வரி செலுத்த கோரி தாஜ்மஹாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
முகலாய மன்னர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய தாஜ் மஹால் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகிய இரண்டுக்கும் 5 கோடி வரை குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவையில் இருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
இந்த நோட்டீஸ் குறித்து விளக்கம் அளித்த இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவற்றுக்கு தவறுதலாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், புராதன மற்றும் பாரம்பரிய சின்னங்களுக்கு சொத்து வரி குடிநீர் ஆகியவை கிடையாது என்றும் கூறியுள்ளனர்
 
இதனை அடுத்து தவறாக நோட்டீஸ் அனுப்பியது யார் என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது
 
Edited by Mahendran