வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (12:54 IST)

குற்றாலம் மெயின் அருவில் பெருவெள்ளம். சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

courtralam main falls
குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்து வருவதையடுத்து குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.
 
குறிப்பாக மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இருப்பினும் மெயினருவியில் மட்டும்தான் குளிக்க தடை என்றும் ஐந்தருவி குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran