வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2023 (10:25 IST)

இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகள் வருகை- தமிழகம் முதலிடம் !

இந்தியாவில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை தந்த சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிகள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டம் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சி மற்றும் மா நகராட்சி சார்பில் படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை இன்று நேரில் பார்வையிட்ட  அவர், தமிழ் நாடு ஹோட்டலில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவாது: தமிழ்நாடு இந்தியாவில் சிறந்த சுற்றுலாத்துறையாக  உள்ளது. ஆன்மீக சுற்றுலாவிற்கு இங்கு அதிகளவில் மக்கள் வருகிறார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு 12 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்தியாவில் அதிகம் பேர் வந்த சுற்றுலாத்தலமாக தமிழகம் உள்ளது எனத் தெரிவித்துள்ளளார்.