திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 8 ஜூன் 2023 (08:22 IST)

திருச்சியில் ட்ரோன்கள் பறக்கத் தடை: என்ன காரணம்?

திருச்சியில் இன்றும் நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை என்று காவல்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. 
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர் வாரும் பணிகளை பார்வையதற்காக வருகை தரவுள்ளார். முதலமைச்சரின் வருகையை ஒட்டி திருச்சி நகர் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இன்றும் நாளையும் திருச்சி மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். 
 
தடையை மீறி திருச்சி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva