ராஜஸ்தானில் ரூ.500 க்கு சிலிண்டர் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்…
ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழைகளுக்கு ரூ. 500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை இன்று முதல்வர் அசோக் கெலாட் தொடங்கிவைத்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் நடைபெற்று வருகிறது. இங்கு, இன்னும் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏழைகளுக்கு ரூ.500 விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்தார். சமீபத்தில், வீடுகளுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரையிலான சிரஞ்சீவி மருத்துவ சிகிச்சை திட்டத்தையும் அவர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஏழை மக்களுக்கு ரூ.500 விலையில், சமையல் எரிவாயு சிலிணர் திட்டத்தை இன்று முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடங்கி வைத்தது.
இந்த மானிய விலை சிலிண்டர் திட்டத்தை விமர்சித்துள்ள பாஜக,பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் இன்றைய தேவை,ஆனால், சிலிண்டர் மானியம் ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.