திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 7 ஜூன் 2023 (21:29 IST)

உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று தீர்வு காணும் ஒரு செயலி மற்றும் இணையதளம் அறிமுகம்

food
தமிழகத்தில் உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் ஒரு செயலியும் இணையதளமும்  இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு  நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றது முதல்  திமுக அரசு பல திட்டங்களை  அறிமுகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் ஒரு செயலியும் இணையதளமும்  இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமைச்சர் சக்கரபாணி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’உணவின் தரம் குறித்த நுகர்வோர் புகார்களைப் பெற்று உடனடியாக தீர்வு காணும் வகையில் TN Food safety consumer app எனும் செயலியும், https://foodsafety.tn.gov.in எனும் இணையதளமும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முழுமையான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் தரமான உணவு அனைவருக்கும் கிடைக்க வேண்டியது அவசியம். அத்தகைய முழுமையான உணவு பாதுகாப்பை நோக்கி திராவிட மாடல் அரசு முனைப்புடன் செயல்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.