வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 ஜூன் 2023 (23:33 IST)

அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம்- முதல்வர் முக.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் பெருமையை உணராதவர்களுக்கு உணர்த்தி, அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் முதல்வர் முக.ஸ்டாலின் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதல்வர் முக.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’தமிழ்நாட்டின் வலிமையான மருத்துவக் கட்டமைப்புக்கு அடித்தளம் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள். அத்தகைய கட்டமைப்பை நகரங்களுக்கும் விரிவுபடுத்தி, நகரத்தில் வாழும் எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 500 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களைத் திறந்து வைத்தேன்.

கல்வியிலும் மக்கள் நலன் பேணுவதிலும் மிகச்சிறந்த மாநிலமாக விளங்கி, தலைநிமிர்ந்து நிற்கும் நமது தமிழ்நாட்டின் பெருமையை உணராதவர்களுக்கு உணர்த்தி, அனைவருக்கும் உயர்ந்த மருத்துவம் என்ற இலக்கை நோக்கி விரைவோம்!’’ என்று தெரிவித்துள்ளார்.