1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Driver Burnt his Family with Car

குடும்பத்தை காருக்குள் வைத்து எரித்த கால் டாக்சி டிரைவர்

டிரைவர்
சென்னை நந்தனம் பகுதியில் கால் டாக்சி டிரைவர் ஒருவர் அவரது மனைவி மற்றும் குழந்தையை காரில் வைத்து எரித்து கொலை செய்துள்ளார்.


 

 
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் நாகராஜ், அவரது மனைவி பிரமா மற்றும் 2 வயது மகனுடன் காரில் சென்றுள்ளார். நந்தனம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு அவரது மனைக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
 
அதில் அவரது மனைவி பாட்டிலில் இருந்த பெட்ரோலை எடுத்து மேலே ஊற்றி கொண்டு தற்கொலை செய்வதாக கூறியுள்ளார். உடனே அவர் காரை நிறுத்திவிட்டு தீப்பெட்டியை எடுத்து தீவைத்துள்ளார். தீப்பற்ற தொடங்கியவுடன் குழந்தையை அவரது மனைவி காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசிவிட்டார்.
 
கார் எரிவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காரிலிருந்த பிரேமாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.
 
இதுகுறித்து காவல் துறையினர் அந்த கால் டாக்சி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
 
அடுத்த கட்டுரையில்
பாரசூட் சாகசப் பயிற்சியில் தவறி விழுந்து தொழிலதிபர் பலி