1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dr Ramadsoss says about education department

நான் சொன்னதை செய்த பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள்: டாக்டர் ராமதாஸ்

டாக்டர் ராமதாஸ்
நேற்று நான் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக் காட்டியதை இன்று நடைமுறையில் செய்துள்ள பள்ளிக்கல்வித்துறைக்கு எனது பாராட்டுக்கள் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
 
தமிழ்நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசு பள்ளிகளில் சேருவதற்கு உள்ள வாய்ப்பு குறித்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிக்கை மூலம் நேற்று வலியுறுத்தியிருந்தேன்
 
அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீண்ட வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது சரியான நேரத்தில் செய்யப்பட்ட சரியான பணி. பள்ளிக்கல்வித்துறைக்கு பாராட்டுகள். இந்த வசதியால் மக்கள் பயன்பெற வேண்டும்!
அடுத்த கட்டுரையில்
நிர்மலா சீதாராமனுக்கு கன்னியாகுமரி எம்பியின் வேண்டுகோள்!