வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (15:10 IST)

வந்தே பாரத் ரயில் கட்டணத்தை விட அதிகம்.. கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்..!

சென்னை நெல்லை இடையே வந்தே பாரத் ரயிலில் கட்டணம் ரூபாய் 1610 என்று இருந்து வரும் நிலையில் அதைவிட மூன்று மடங்கு கட்டணம் ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படுவதாகவும் ஆனால் ஆட்சியாளர்கள் அதை கண்டு கொள்வதில்லை என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர். 
 
தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளில் கூட்டம் அதிகமாக வருவதை அடுத்து கட்டணமும் அதிகமாகி உள்ளது 
 
சென்னையில் இருந்து நெல்லை செல்லும் ஆம்னி பேருந்துகள் ரூ.4,700 வரை கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சென்னையிலிருந்து நெல்லை வரை வந்தே பாரத் ரயிலில் ரூ.1610 மட்டுமே 
 
அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் செல்வதற்கும் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் மூன்று மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதாக தகவல் வெளியாக உள்ளன. 
 
மேலும் தொடர் விடுமுறை காரணமாக உள்நாட்டு விமான கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva