1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. donald trumph wrote a letter nato

அமெரிக்கா நிறைய பண்ணிடுச்சி!. இனிமே நீங்க பண்ணுங்க!. NATO-வை எதிர்க்கும் டிரம்ப்!...

donald
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவி பொறுப்புக்கு வந்தபின் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பல போர்களை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். எனவே, எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டும் என்று வெளிப்படையாகவே சொன்னார்.

ஆனால் டென்மார்க் நாடு அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்படவில்லை. ஒரு பக்கம் டென்மார்க்கின் வசம் உள்ள கிரீன்லாந்து தீவை நாங்கள் எடுத்துக் கொள்வோம் என தொடர்ந்து கூறி வருகிறர். இதற்கு ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மாறவில்லை.

இந்நிலையில் நார்வே நாட்டிற்கு ஒரு மிரட்டல் கடிதத்தை எழுதியிருக்கிறார் டிரம்ப். அதில் ‘8 போர்களை நான் தடுத்து நிறுத்தியும் உங்கள் நாடு (நார்வே) எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கவில்லை. இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை.. அமெரிக்காவுக்கு என்ன தேவையோ அதன் து மட்டுமே இனிமேல் என் கவனம் இருக்கும்.

க்ரீன்லாந்தை ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து பாதுகாக்கும் திறன் இல்லாத நாடு டென்மார்க்.. அந்த நிலத்திற்கு உரிமை இருப்பதை நிரூபிக்கும் எழுத்து ஆவணங்கள் எதுவும் டென்மார்க் நாட்டியிடம் இல்லை. NATO அமைப்பு உருவானதிலிருந்து அதற்காக அதிக உதவி செய்தது அமெரிக்காதான்.

இப்போது அமெரிக்காவுக்காக NATO ஏதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.. கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவுக்கு முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும்’ என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் சிபிஐ விசாரணை குறித்து பரவும் வதந்தி.. அரசியல்ன்னா இப்படித்தான் இருக்கும்..!