வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 ஜூலை 2023 (16:10 IST)

மருத்துவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் - விஜயகாந்த்

மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’’தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களின் கோரிக்கைகளை  தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

மனித குலத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு, தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

தகுதிக்கேற்ற ஊதியம் உள்ளிட்ட மருத்துவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்.

கடவுளுக்கு இணையாக போற்றப்படும் மருத்துவர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பை தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் வெளியிட்டால் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளர்.