1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Five hours surgery finished to minister senthil balaji

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு: 5 மணி நேரம் நடந்ததாக தகவல்..!

Senthil Balaji
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை இன்று காலை 5,30 மணிக்கு தொடங்கிய நிலையில் சற்று முன் முடிவடைந்ததாகவும் 5 மணி நேரத்திற்கு பிறகு இந்த அறுவை சிகிச்சை நிறைவு பெற்றதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. 
 
காவேரி மருத்துவமனையின் மருத்துவர் ரகுராம் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவர் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒரு மாத முதல் மூன்று மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 
 
தற்போது செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் இருப்பதால் அவரை இன்னும் ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை விசாரணை செய்வதில் பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஒரே ஆணையில் 560 வட்டார வள அலுவலர்களை பணி நீக்கம் செய்வதா? டாக்டர் ராமதாஸ் கண்டனம்..!