1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. DMK Youth 2nd Conference postponed

தென் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: இளைஞரணி 2வது மாநாடு ஒத்திவைப்பு..!

திமுக
திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 திமுக இளைஞரணி மாநாடு சேலத்தில் டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அமைச்சர்கள் தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு பணிகளை கவனித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சேலத்தில் 24ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி 2வது மாநில மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாக திமுக அறிவித்துள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 17ம் தேதி நடைபெறவிருந்த மாநாடு சென்னை வெள்ளம் காரணமாக 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்.. இன்று I.N.D.I.A கூட்டணி அவசர ஆலோசனை..!