வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 டிசம்பர் 2023 (16:25 IST)

நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட்

Parliament attack
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நாடாளுமன்றத்திற்குள் புகுந்த இருவர் கண்ணீர்  புகைக்குண்டு வீசினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் குரலெழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு பற்றி கேள்வி எழுப்பியும், இதுதொடர்பாக கேள்வி எழுப்பிய நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 14 எம்பிக்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும் என அமலியில் ஈடுபட்டதாக 31 எம்பிக்கள் இன்று ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் டி.ஆர்.பாலு, ஆர்.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட 31 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திமுக எம்பிக்கள்,  தமிழச்சி தங்கபாண்டியன், சி,என், அண்ணாதுரை, செல்வம். எஸ். எஸ். பழனிமாணிக்கம் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன், திருநாவுக்கரசு ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் 31 எம்பிக்களும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.