வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (16:09 IST)

மண்ணை கவ்விய பாஜக: வாஷ் அவுட் ஆன ஸ்டார் வேட்பாளர்கள்!

தமிழக பாஜக மக்களவை தேர்தலில் டோட்டலாக வாஷ் அவுட் ஆகி மண்ணை கவ்விய உள்ளது. 
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்பட்டது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொகுதியில்  பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்திரராஜனும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் ஹெச்.ராஜாவும், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் வேட்பாளராக களமிறங்கினர். 
 
தமிழகத்தில் பாஜகவிற்கு துவக்கம் முதலே எதிர்ப்பு இருந்து வந்த நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரத்தின் போதும் எதிர்ப்பு தொடர்ந்தது. ஆனால், இந்த ஒட்டு மொத்த எதிர்ப்பின் உருவமாக தமிழகத்தில் பாஜக வாஷ் அவுட் அமைந்துள்ளது. 
 
திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட தாங்கள் கேட்டு வாங்கிய தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் முன்னையில் உள்ள நிலையில் பாஜக மண்ணை கவ்வியுள்ளது.