திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ஆனந்தகுமார்
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (20:25 IST)

பிளக்ஸ் போர்டுகளை சேலைகள் போட்டு மூடிய திமுக வினர்

கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த பிளக்ஸ் போர்டுகள் சேலைகள் போட்டு மூடிய திமுக வினரால் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதிமுக விளம்பரத்தினை மறைக்க சேலை கட்டிய தி.மு.க வினர் காலம் காலமாக கட்சியின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்த சுயவிளம்பரம்
 
நிகழ்ச்சி தலைமை செந்தில்பாலாஜி வைரல் போட்டோ மற்றும் சுடச்சுட செய்தி மற்றும் இன்னும் வெளிவராத உண்மைகள்
 
தமிழக அளவில் செந்தில்பாலாஜி என்றால் அந்த பெயர் தெரியாதவர்களே கிடையாது. ஏனென்றால் முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செல்லப்பிள்ளை என்று கூட இருந்தவர், இந்நிலையில், அ.தி.மு.க வில் மூத்த நிர்வாகிகளை மதிக்காதது, அளவிற்கு அதிகமான சொத்து சேர்த்தது மட்டுமில்லாமல், வருங்கால முதல்வர் பதவிக்கே ஆசைப்பட்டார். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரை கட்சி பதவி மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்கள். இந்நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் ஜெயலலிதா வைத்து வந்தார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு யார் முதல்வர் என்று  கூவத்தூர் எம்.எல்.ஏ க்கள் பிரச்சினையில் தான் தான் அடுத்த முதல்வர் என்று நினைத்து எம்.எல்.ஏ க்களை பேரம் பேசி வந்தார்.

இந்நிலையில் ஒரு அமைச்சராக இருந்த கட்சியில், அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ வாக எப்படி இருப்பது என்று நினைத்து அ.தி.மு.க கட்சியை பல்வேறு கோணங்களில் பிரித்த ராஜதந்திரியில் இவரும் ஒருவர், அப்படிதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்றும், மேலும் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ் ஆகிய இருவரும் ஒன்றிணைந்த நிலையில், அவர்களையும் பிரிக்க திட்டம் தீட்டியவர் ஏனென்றால் ஒன்று அமைச்சர் இல்லையெல் துணை முதல்வர் என்று கனகட்சிதமாக டி.டி.வி தினகரனின் வாயாலேயே சொல்ல வைத்தவர். இந்நிலையில் அ.தி.மு.க வினரும் சுதாரிக்க கொண்டனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் சுதாகரித்து கொண்டனர். பின்னர் பொட்டியை கட்டி கொண்டு வேறு கட்சிக்கு மாறி விடலாம் இந்த கட்சியில் இனி நம் பருப்பு வேகாது என்று நினைத்து உடனே நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் அகுக கட்சியிலிருந்து இகுக கட்சிக்கு மாறுவது போல, அதிமுக வில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கும், மேலும், அக்கட்சியிலிருந்து தி.மு.க விலும் இணைந்தார்.

ஏற்கனவே தி.மு.க மற்றும் மதிமுக ஆகிய கட்சியிலிருந்து தான் வந்தவர் என்பது பின்பு தான் தெரியவந்தது. தற்போது தி.மு.க வில் சேர்ந்த உடனே கட்சியின் மாவட்ட பொறுப்பாளர், அக்கட்சியின் எம்.எல்.ஏ வேட்பாளர் மற்றும் எம்.எல்.ஏ சீட் வாங்கி ஏராளமான திமுக கட்சியினரை முகம் சுளிக்க வைத்து அதிமுக கட்சிக்கு வரவழைத்தவரும் செந்தில் பாலாஜியே, இதெல்லாம் தெரியாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நம் கொங்கு மண்டலத்தினை வலப்படுத்த செந்தில்பாலாஜி போல் உள்ளவர்களால் மட்டுமே முடியும் என்று கூறி, திருச்சி கே.என்.நேரு, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோரை எல்லாம் உதறி தள்ளி விட்டு ஏன் ? கட்சிக்காக கொடைக்குரிசில் என்று பெயர் வைத்து, தற்போது அவர் வாடகை வீட்டில் வசிக்க வைத்த கே.சி.பி என்கின்ற கே.சி.பழனிச்சாமி ஆகியோரை எல்லாம் விட்டு விட்டு இன்றும் செந்தில் பாலாஜி தான் நம் வருங்காலம் என்று நேற்று இவரை (செந்தில்பாலாஜி) நம்பி மக்கள் கிராம சபை கூட்டத்தினை நடத்தினார். அதில் எழுதிக்கொடுத்ததை ஒழுங்காக கொடுக்க வில்லை என்கின்றார். கரூர் அடுத்த வாங்கல் குப்பிச்சிபாளையம் பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்திற்கு வந்த திமுக தலைவர் முதலில் செந்தில்பாலாஜியை பாராட்டினார். பின்பு அப்படியே ரிவிட் வைத்தது போல் ஆனதாம். காரணம், கிராம சபைக்கூட்டத்திற்கு மக்களை அழைத்து வரமால் கட்சி நிர்வாகிகளை தான் அதிகமானோர் அழைத்து வந்தது ஒன்று, அதுமட்டுமில்லாமல், கட்சி நிர்வாகிகளில் மூத்த நிர்வாகிகள் ஓரங்கட்டப்பட்டனராம், இவரோடு திமுக வில் இணைந்தவர்களுக்கே திமுக வில் முக்கிய பொறுப்பு அதையெல்லாம் மு.க.ஸ்டாலினிடம் பலமுறை கூறியும் அவரும் எதுவும் செய்ய முடியாமல் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று இருக்கின்றனர்.

இது தவிர ஒரு கட்சியின் தலைவர் அதுவும் எதிர்கட்சி தலைவர் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வரும் போது எங்கும் சுவர் விளம்பரம் மற்றும் நீதிமன்ற அறிவுரையின் படி, அரசு உத்தரவிற்கிணங்க பிளக்ஸ் எங்கும் வைக்காமல், அதிமுக வினர் வைத்த பிளக்ஸ் மேல், திமுக வினர் சேலைகளை அதாவது சிகப்பு மற்றும் கருப்பு சேலைகளை போட்டு அந்த விளம்பரத்தினை மறைத்தனராம், அதுவும் இல்லாமல், அங்கே நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கூவத்தூரில் நடந்த விவகாரம் மற்றும் ஜெயலலிதாவின் மரணம் ஆகியவைகள் குறித்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சும்மா கிழி கிழி என்று பேசிய போதும் இதற்கெல்லாம் நமது ஆட்சி வரும் 4 மாதம் பொறுத்திருங்கள் என்று ஸ்டாலின் கட்டளை யிட்டார். அதற்கு பின்புறம் இருந்த திமுக மூத்த நிர்வாகிகள் அந்த இரண்டும் நம்ப கரெண்ட் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியிடமே கேட்கலாம், ஏனென்றால் இரண்டும் நடந்த போது அவர் அதிமுக வில் தான் இருந்தார் என்று முனுமுனெத்தனர்.

இது மட்டுமில்லாமல் தமிழக போக்குவரத்து துறையில் ஊழல் என்று கூறியது தான் ஹைலைட், ஏனென்றால் 10 ஆண்டுகளில் தற்போது உள்ள அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 5 ஆண்டுகள் ஒகே, ஆனால், ஏற்கனவே இருந்த 5 ஆண்டுகளில் நம் கரெண்ட் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி தானே 4 ¾ வருடம் இருந்தார் அதிமுக வில் அதுவும் அமைச்சர் பதவியில் என்றனராம். இது தவிர மு.க.ஸ்டாலின் வந்து செல்லும் வரைக்கும் யாரும் அதாவது திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் சந்திக்க கூடாது என் லிஸ்ட்டில் இருப்பவர்கள் தான் ஸ்டாலிடம் அதுவும் நான் எழுதிக் கொடுத்ததை தான் பேச வேண்டுமென்றதோடு, ஏற்கனவே மெடிக்கல் காலேஜ் இடம் வாங்கி போட்டது தான் கை மாறிப்போச்சு, தற்போது புதிய பஸ்ஸ்டாண்ட், ரிங் ரோட்டிற்காக இடம் வாங்கிப்போட்டதாவது நான் விற்றே ஆக வேண்டுமென்று கட்டளையாம். இது மட்டுமில்லாமல், வழி எங்கும் அதிமுக வினர் வைத்த சாதனை விளம்பரங்கள் மற்றும் வீடுகளில் மேல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ், கடைகளின் மேல் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் ஆகியவைகளோடு, கரூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டிருந்த எம்.ஆர்.வி டிரஸ்ட் என்கின்ற தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சீரிய முயற்சியால் கொண்டு வரப்பட்ட கனாகத்திற்குள் கரூர் என்கின்ற திட்ட்த்தின் கீழ் கொண்டு வரப்பட்ட மரக்கன்றுகளையும் வாழை மரங்களையும் குட்டி வாழை மரங்கள் கொண்டு மறைத்தது தான் ஹைலைட் ஆம். ஆக மொத்தம் கரூரில் உள்ள ஜவுளிக்கடையில் கருப்பு மற்றும் சிகப்பு சேலைகள் தான் அதிகம் விற்பனையானதாம், அதிமுக வின் விளம்பரத்தினை மறைக்க. மேலும் நம் கட்சி நம் இயக்கம் என்று இருந்த மூத்த திமுக நிர்வாகிகள் எப்படி இருந்த நம் திமுக வை, இப்படி கொண்டு வந்துட்டாப்பிடி இந்த செந்தில்பாலாஜி என்று முனுமுனுவெத்தனர்.
 
 
திட்டங்கள் எதுவும் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த வில்லை & செய்ய வில்லை என்று குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலினிடம்., பொதுமக்கள் மற்றும் அதிமுக சார்பில் ! எந்த திட்டம் செய்ய வில்லை என்று குறை கூறும் அதே வேலையில் செய்த திட்டத்தின் விளக்க விளம்பரங்கள் அதிமுக வின் சார்பில் வைக்கப்பட்டிருந்த்து அந்த விளம்பரத்தின் மேல் சேலையை வைத்து மறைத்தது ஏன் ? என்று கேள்விக்கணைகளையும் எழுப்பியுள்ளனர்.