செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 ஜனவரி 2021 (17:55 IST)

’குடி’மகனுக்கு வழங்கப்படும் பணம்… மீண்டும் டாஸ்மாக் மூலம் வரும் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சமீபகாலமாக பேசுவது எல்லாம் சர்ச்சைகளாக மாறி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்தார். அப்போது அவர் திருக்குறளை எழுதியது அவ்வையார் என குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல இன்று தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பாக தலா 2500 ரூபாய் அளிப்பதாக அறிவித்துள்ளதைக் குறிப்பிட்டு பேசிய அவர் குடி மகன்களுக்கு வழங்கப்படும் இந்த பணம் டாஸ்மாக் மூலமாக மீண்டும் அரசுக்கே வரும் எனக் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் மதுபோதையில் இருந்த தொண்டர் ஒருவர் தனக்கு இன்னமும் கூப்பன் கிடைக்கவில்லை எனக் கூறியதற்கு பதிலளிக்கும் போதுதான் அவர் இப்படிக் கூறினார்.