வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (17:52 IST)

அதிபருக்கு எதிராக கருத்துக் கூறிய பிரபல கோடீஸ்வரர் மாயம் !!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான ஜேக்மா கடந்த 2 மாதங்களாக காணவில்லை எனத் தகவல்கள் வெளியாகிறது.

சீன தேசத்தின், ஆன் லைன் வர்த்தகச் சக்ரவர்த்தி என்று புகழப்படும், அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா, கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமைப் பதவிலிருந்து விலகினார்.

கடந்த 90 களின் இறுதியில் ஒரு ஆங்கில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஜாக் மா, தன் நண்பர்களுடன் இணைந்து, அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார். ஆரம்பத்தில் இவரது நண்பர்கள் இவரை விட்டு ஓடினாலும் தம் உறுதியில் விடாப்பிடியாய் நின்று, இன்று ஆசியாவில் இரண்டாவது மிகப்பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரையும், சீனாவில் ஆன்லைன் வர்த்தகத்தின் ராஜாவாகவும் திகழ்கிறார். சீன நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருபருபவரும் ஜாக்மா தான்.

இந்நிலையில், அலிபாபா நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஜாக்மாட் அப்பதவியிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு விலகினார்.

ஜாக்மாவுக்குப் பின், மாவென் டேனியல் ஸெங் அப்பதவியை ஏற்றுள்ளார். இருப்பினும், அலிபாபா குழுமத்தில் 5.3 % பங்குகளைக் கொண்டுள்ள ஜாக்மா, இந்நிறுவனத்தின் முக்கிய முடிவுகளில் பங்கேற்று வந்தார்.

இந்நிலையில் ஷி ஜின் பிங் தலைமையிலான சீனா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அவரது ஆட்சிக்கு எதிரான ஜாக் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அவர் காணாவில்லை எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஷாங்காயில் நடைபெற்ற கூட்டத்தில் ஜாக் மா பேசும்போது, சீனா புதிய வர்த்தகக் கண்டுபிடிப்புகளை ஜீரணிக்க முடியாம் உள்ளது என வெளிப்படையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து சீன அரசு அதிகாரிகள் ஜாக் மாவை கண்டித்தனர்.

பின்னர், ஜாக் காவின் சுமார் 2,73,000 கோடி பங்கு வெளியீட்டை சீன அதிகாரிகள்  தடுத்ததாகவும் இதையொட்டி ஜாக்மாவை இரு மாதங்களாக்க் காணவில்லை எனவும் அவர் எங்குள்ளார் என்பது தெரியவில்லை எனத் தகவல்கள் வெளியாகிறது.