பிரபல இயக்குநரின் படத்தில் ’’மாஸ்டர்’’ பட நடிகர் ! ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் வசந்தபாலன். இவர் ஆல்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தனது தனித்துவமான படைப்புகளான , வெயில், அங்காடித் தெரு, அரவாப்ன், காவியத் தலைவர் உள்ளிட்ட படங்கள் மூகம் மக்களைக் கவர்ந்து முன்னணி இயக்குநராக உள்ளார்.
இந்நிலையில், தற்போது வசந்தபாலன் நடிகர் ஜிவி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெயில் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
இந்நிலையில், வசந்தபாலனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகிறது. இப்படம் இந்தியில் வெளியாகி ஹிட்டாப தி லிஃப்ட் பாய் என்ற படத்தின் ரீமேக் என்று தெரிகிறது.
இப்படத்தில், கைதி , மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தைப்பெற்றுள்ள அர்ஜூன் தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்,நடிகைகளின் தேர்வு முடிந்தபின் விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானபிறகு யார் யார் நடிக்கவுள்ளனர் என்பது தெரியும். இதனால் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.