புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 மே 2025 (10:48 IST)

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் திமுகவில் இருந்து நீக்கம்.. பிடிஆரின் தீவிர ஆதரவாளரா?
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவரும்,  அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் நெருக்கமான நபருமான பான் வசந்த் திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் ஒழுக்க கோடுகளை மீறி, நிர்வாக சிக்கல்கள் மற்றும் மன்ற கூட்டங்களில் எதிர்ப்பாராத முறையில் செயல்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
மதுரையில் ஜூன் 1ம் தேதி நடைபெற உள்ள திமுக மாநில பொதுக்குழுக் கூட்டத்திற்கு முன்னதாகவே, முதல்வர் ஸ்டாலின் மே 31ம் தேதி மதுரைக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ள நிலையில், கட்சியின் நம்பிக்கைக்குரிய ஒருவர் மீது தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. மேயர் நடத்திய மாநகராட்சி மன்றக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. ஆனால், அதிமுக கவுன்சிலர்களின் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
 
மேயரின் செயல்களில் பான் வசந்தின் தாக்கம் இருந்ததாக கட்சியினரிடையே ஆதாரங்களோடு புகார்கள் வந்துள்ளன. மேலும், நகராட்சியில் நடந்த ஒப்பந்த ஒதுக்கீடு மற்றும் நிர்வாக முறைகேடுகளில் அவரின் ஈடுபாடு குறித்த குற்றச்சாட்டுகளும் விசாரணைக்குள் வந்துள்ளன. இதனையடுத்து, அவரை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தற்காலிகமாக அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்க உத்தரவிட்டுள்ளார்.
 
Edited by Mahendran