1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. RBI Clarifies on Mobile Phone Blocking for Loan Defaults

EMI-ல் செல்போன் வாங்கி தவணை கட்டாவிட்டால் வங்கி போனை பிளாக் செய்யலாமா? ஆர்பிஐ சொல்வது என்ன?

ரிசர்வ் வங்கி
கடனில் வாங்கப்பட்ட மொபைல் போன்களுக்கான தவணை தொகையை செலுத்த தவறினால், அந்த போனை முழுமையாக முடக்க கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தனது புதிய வரைவு வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளது. கடன் தொகையை மீட்டெடுப்பதற்காக வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ மொபைல் போனை முழுமையாக லாக் செய்வதோ அல்லது முடக்குவதோ முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
 
இருப்பினும், சில குறிப்பிட்ட செயல்பாடுகளை மட்டும் கட்டுப்படுத்த லெண்டர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இணைய வசதி , Incoming Calls அவசரக்கால SOS வசதி மற்றும் அரசாங்கத்தின் பொதுப் பாதுகாப்பு அறிவிப்புகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை எக்காரணம் கொண்டும் முடக்க கூடாது என்று ஆர்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது.
 
ஒருவேளை வாடிக்கையாளர் நிலுவை தொகையை செலுத்திவிட்டால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மொபைலின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ. 250 வீதம் வட்டி இழப்பீடு வழங்க வேண்டும். 
 
மேலும், கடன் வசூலிப்பின் போது வாடிக்கையாளர்களை திட்டுவதோ, சமூக ஊடகங்களில் அவர்களது விவரங்களை பகிர்வதோ அல்லது மிரட்டுவதோ போன்ற கடுமையான அத்துமீறல்களில் கடன் மீட்பு முகவர்கள் ஈடுபடக் கூடாது என்றும், அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia