1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , சனி, 1 ஜூன் 2024 (18:01 IST)

திமுக கழக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்.பாரதி, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக திமுக முகவர்களுக்கு ஆலோசனை!

கோவை நாடாளுமன்ற திமுக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம்,  கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள ஸ்ரீ சாய் மஹாலில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து, கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர்  என்.ஆர்.இளங்கோ, கழக தலைமை நிலைய செயலாளர் டிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோர் காணொலி வாயிலாக,  முகவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
 
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 க்கு 40 வெற்றி பெறும் இதனைத்தொடர்ந்து கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex Mla பேசுகையில்;- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். தமிழகம் புதுச்சேரியில், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 க்கு, 40 இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றவர், வாக்கு எண்ணிக்கையின்போது, முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், ஜூன் 3 ந்தேதி முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி மாவட்டம் முழுவதும் கழக நிர்வாகிகள், தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி  நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என கூறினார்.இதில், கோவை  வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் குமார், வழக்கறிஞர் அணி அமைப்பாளரும், தலைமை முகவருமான அன்புசெழியன் மற்றும் பகுதி கழக செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், திமுக முகவர்கள் கலந்து கொண்டனர்.