1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 31 மே 2024 (14:50 IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை..! பேக்சோ சட்டத்தில் திமுக பிரமுகர் கைது..!!

DMK Arrest
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல பிரிவு ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் பேக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
 
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி இரவு 7 மணியளவில் தனக்கு தலைவலி என தெரிவித்து அரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பின்பு தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
 
அப்போது உறவினர் முருகேசன் என்பவர், வீட்டில் விடுகிறேன் என்று கூறி சிறுமியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். முருகேசன் திமுகவில் தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா நல பிரிவு ஓட்டுநர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார்.  
 
இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது சிறுமியிடம், முருகேசன் தவறுதலாக நடந்துக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

 
இது குறித்து தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அரூர் மகளிர் காவல் துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.