திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திருச்சி , சனி, 1 ஜூன் 2024 (14:56 IST)

"ரோட்டோ எக்ஸ்போ 2024"நிகழ்ச்சியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது
 
இந்த கண்காட்சியின் நோக்கமாக அரசு பள்ளியில் பெண்களுக்கு கழிப்பறை கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்காக இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.
 
இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என். நேரு  குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
 
இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயர்  மு அன்பழகன் மற்றும் தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை  இயக்குனர் டாக்டர் பிரதீபா, ஸ்வேதா மருத்துவமனையின் இயக்குனரும் , டாக்டருமான செந்தூரன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
 
இந்த கண்காட்சியில் மருத்துவ மனைகள், ஜவுளிகள், கட்டுமான பொருட்கள், ஆட்டோமொபைல்ஸ், கைவினை பொருட்கள், பேன்சி, அழகு சாதன பொருட்கள், பர்னிச்சர் வகைகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன.