1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (21:21 IST)

சூதாட்ட நிறுவனத்திடம் திமுக ரூ.509 கோடி பெற்றுள்ளது ஏன்? எடப்பாடி பழனிசாமி

edapadi
18வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள  நிலையில், இதற்காக அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
ஆளுங்கட்சியான திமுக மீது அதிமுகவும், அதிமுக மீது திமுகவும் மாறி மாறி விமர்சனம் கூறி வருகிறது.
 
இந்த நிலையில்,  பெருமுதலாளிகளிடம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் பத்திர பெற்றுள்ள திரு.  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேர்தல் பத்திர முறைகேடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:
 
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சோளிங்கர் பகுதியில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று, கழக வெற்றி வேட்பாளர் 
திரு. A.L. விஜயன் அவர்களுக்கு 
இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்.
 
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் அஇஅதிமுக அரசு செய்த சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க என்னால் முடியும். திரு.  மு.க.ஸ்டாலின்  அவர்களால் முடியுமா?
 
விடியா திமுக ஆட்சி தமிழ்நாட்டில் பொறுப்பேற்றது முதலே தமிழ்நாட்டில் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.
 
ஆன்லைன் ரம்மி, சூதாட்டம் நடத்தும் நிறுவனத்திடம் திமுக 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திர நிதி பெற்றுள்ளது ஏன்? பெருமுதலாளிகளிடம் 600 கோடி ரூபாய்க்கும் மேல் தேர்தல் பத்திர பெற்றுள்ள திரு.  மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தேர்தல் பத்திர முறைகேடு பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.