ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (16:02 IST)

நோட்டாவுக்குப் பதிலாக இப்படி வாக்களியுங்கள்-விஜய் ஆண்டனி

நோட்டாவுக்குப்  பதிலாக மோசமானவர்களின் சிறந்தவரை தேர்ந்தெடுத்து வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த நிலையில்,  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தேர்தலில் வாக்களிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
தேர்தலில் நோட்டாவுக்குப் பதிலாக மோசமானவர்களை தேர்வு செய்து வாக்களியுங்கள் தேர்தலில் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் முக்கிய பணி. எனவே வாக்கு சதவீதம் அதிகரிக்க வேண்டும் என விரும்பி அனைவரும் வாக்களியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
நான், சலீம், பிச்சைக்காரன் 1 மற்றும் 2 ஆம் பாகங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி,  தற்போது நடித்துள்ள படம் ரோமியோ. இப்படத்தை இயக்குனர் வி நாயக் வைத்திய நாதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனி உடன் மிருணாளினி(ஹீரோயின்). யோகி பாபு, கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 
 
இப்படம் வரும் ரம்ஜான் அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.