திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (15:05 IST)

என் கணவனை கொல்பவர்களுக்கு ரூ.50,000: திருமணமான 5 மாதத்தில் அறிவித்த இளம்பெண் கைது..!

arrested
என் கணவனை கொல்பவர்களுக்கு 50 ஆயிரம் வழங்கப்படும் என திருமணம் ஆன ஒரே மாதத்தில் வாட்ஸ் அப் மூலம் அறிவிப்பு வெளியிட்ட இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நிஷாந்த் என்பவரை கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் ஐந்தே மாதத்தில் அவர் தனது கணவருடன் சண்டை போட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். 
 
இந்த நிலையில் நிஷாந்த் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல வந்த போது கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக தெரிகிறது. அது மட்டுமின்றி அவர் தனது மொபைல் போனில் உள்ள வாட்ஸ் அப்பில் தனது கணவனை கொலை செய்பவர்களுக்கு 50,000 கொடுப்பேன் என்றும் ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். 
 
இதை பார்த்துவிட்டு சிலர் நிஷாந்திடம் கூற உடனே அவர் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் தனது மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாகவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதுதான் காரணம் என்று நிஷாந்த் புகார் அளித்த நிலையில் போலீசார் அந்த பெண் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran