103 வயது பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது – திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Last Updated: செவ்வாய், 26 ஜனவரி 2021 (11:30 IST)

 

தமிழகத்தைச் சேர்ந்த 103 வயது பாட்டி பாப்பம்மாளுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

 

103 வயதிலும் விவசாயம் செய்து வாழ்ந்துவரும் மூதாட்டி பாப்பம்மாளுக்கு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது அறிவித்து கௌரவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கும் மற்ற விருது பெற்றவர்களுக்கும் பாராட்டு தெரிவித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘ திமுக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, திமுகவுக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கட்சியின் போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்எனக் கூறியுள்ளார்.

 

 இதில் மேலும் படிக்கவும் :