100 நாட்களில் தீர்வு என்பது அரசியல் நாடகம்: ஸ்டாலின் அறிவிப்பு குறித்து ஜிகே வாசன் கருத்து

gk vasan
100 நாட்களில் தீர்வு என்பது அரசியல் நாடகம்:
siva| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (19:09 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய போது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று 100 நாட்களில் அதற்கு தீர்வு காணப்படும் என்றும் திமுக ஆட்சி வந்தவுடன் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கூறினார்
இந்த அறிவிப்பு தமிழக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெறும் அரசியல் நாடகம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் விமர்சனம் செய்துள்ளார்

மக்களிடம் மனுக்களைப் பெற்று 100 நாட்களில் தீர்வு என்பது அரசியல் நாடகம் என்றும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் அவர் கூறியுள்ளார். முக ஸ்டாலின் அறிவிப்பை கடுமையாக விமர்சனம் செய்த ஜிகே வாசன் அவர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :