ரஜினிஅரசியலில் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் - கராத்தே தியாகராஜன்
ரஜினிகாந்த் அரசியலில் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டுமென முன்னாள் காங்கிரஸ் நிர்வகி கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த நிலையில் உடல்நலக் கோளாறு காரணமாக தனது அரசியல் முடிவை மாற்றிக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நல குறைவால் கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார் . இதனால் அவரது ஆதரவாளர்களான தூத்துக்குடி ஸ்டாலின் உள்ளிட்ட சில ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். இன்னும் பலர் வெவ்வேறு கட்சிகளில் இணையவுள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் நெருங்கிய நண்பரும் ரஜினியின் அரசியல் கட்சியில் இணைய ஆர்வம் காட்டியவருமான கராத்தே தியாகராஜன் ரஜினி குறித்துஒரு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், நடிகர் ரஜினி அரசியலில் கெஸ்ட் ரோல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே அவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், இதுகுறித்து அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அதில், அதிமுக அல்லது பாஜகவில் இணையவுள்ளது குறித்து 10 நாட்களில் முடிவு எடுக்க்கவுள்ளேன். கொரோனா காலத்தில் முதல்வர் பழனிசாமிதான் சிறப்பாகச்செயல்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அதனால் அவர் பாஜக அல்லது அதிமுகவில் இணையவாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.