தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலினை சகட்டுமேனிக்கு திட்டிய அதிமுக அமைச்சர்: உக்கிரத்தில் திமுக தொண்டர்கள்
- இட்லி மீம்ஸ், அதிமுக வுக்கு புது விளக்கம் – நெட்டிசன்ஸ் அலப்பறை
- ஸ்டாலின் - தினகரன் எதிர்பாரா சந்திப்பு: டிபிஐ வளாகத்தில் திடீர் பரபரப்பு
- ஓ.ராஜாவை மீண்டும் கட்சியில் சேர்த்தது ஏன்? அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
- தம்பிக்காக ஓ.பி.எஸ். தர்மயுத்தம் – பின்னணியில் பாஜகாவா ?
திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி திடீர் மாற்றம்
மக்களிடம் செல்வோம்- மக்களிடம் சொல்வோம்- மக்களின் மனங்களை வெல்வோம்” என்ற மூன்று முத்தான முழக்கங்களை முன் வைத்து வரும் ஜனவரி 3ஆம் முதல் தேதி ஊராட்சி சபை கூட்டத்தை நடத்த போவதாக சமீபத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஊராட்சி சபை கூட்டம் தேர்தல் பிரச்சாரமாகவும் பயன்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஜனவரி 2ஆம் தேதி முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க உள்ளதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளதால் திமுக நடத்த திட்டமிட்டிருந்த ஊராட்சி சபை கூட்டம் நடத்தும் தேதி மாற்றப்பட்டுள்ளது
திமுக சார்பில் நடத்தும் ஊராட்சி சபை கூட்டம் சட்டமன்ற கூட்டம் முடிந்தவுடன் ஜனவரி 8ஆம் தேதி முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை வரை நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
